புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எங்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கடைகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்டவை விற்பது தெரியவந்தது. இதையடுத்து பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த இளங்கோ (வயது 50), முருகம்பள்ளம் வெங்கடேசன் (54), சஜ்ஜல்பட்டி திருப்பதி (40), அந்தேவனப்பள்ளி அருணாசலம் (35), நொகனூர் அன்னியப்பா (55), அஞ்செட்டி சமியுல்லா (48), கெலமங்கலம் செந்தில் (30) ஆகிய 7 பேர் கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story