பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
தளி அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் போலீசார் பாலதொட்டனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சூதாடி கொண்டு இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பாலதொட்டனப்பள்ளி மாதேஷ் (வயது 30), தியாகராஜ் (33), முதுகேரிபட்டி சசிக்குமார் (27), சின்ன பென்னங்கூர் உசேன் (35), தேன்கனிக்கோட்டை தமிழரசன் (29), ஒசட்டி வினோத் (30), தாவரக்கரை சிவசங்கர் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story