குட்கா விற்ற 12 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா விற்பனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருள் விற்றதாக ஊத்தங்கரை அம்பேத்கர் நகரை சேர்ந்த நரேஷ்குமார் (வயது 35), கொம்மம்பட்டு கணேசன் (50), பர்கூர் பிச்சனம்பட்டி முனிராஜ் (33), கல்லாவி துரைசாமி நகர் பரிமளா (72) ஆகியோர் கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும்
இதேபோன்று வேப்பனப்பள்ளி கவுண்டர் தெரு காபர் (62), சந்தூர் மணி (40), செல்லம்பட்டி மதியழகன் (52), கிருஷ்ணகிரி கீழ்சோமார்பேட்டை பாஞ்சாலி (42), லைன்கொல்லை சுதாகர் (22), பேரிகை தீர்த்தம் சாலை ராஜப்பா (75), அஞ்செட்டி மாரியப்பன் (42), பின்னமங்கலம் முனிராஜ் (45) ஆகியோர் பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் குட்கா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கி விற்றதாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து குட்கா கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.