வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற தொழிலாளி கைது


வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே வேட்டைக்கு சென்ற போது குறைத்ததால் வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துக்கோட்டை ஊராட்சி குடிசைல்பைல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு நாட்டு துப்பாக்கியுடன் காட்டிற்கு வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சிவப்பா (45) என்பவர் வளர்த்து வரும் நாய் குறைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் அந்த நாயை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அந்த நாய் செத்தது. இதுகுறித்து சிவப்பா தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற வெங்கடேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


Next Story