தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது


தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே மது அருந்த பணம் கேட்டு தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள கமலாபுரத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் அங்குள்ள பால் கடை முன்பு நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த அதேபகுதியை சேர்ந்த விஜி (எ) விஜயகுமார் (25) என்பவர் தனபாலிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த, விஜயகுமார், உருட்டு கட்டையால் தனபாலை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.


Next Story