புகையிலை பொருட்களுடன் வாலிபர் கைது
திண்டுக்கல்லில் 21 கிேலா புகையிலை பொருட்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் குடை பாறைப்பட்டி பகுதியில் ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு மளிகை கடையில் விற்பனை செய்வதற்காக 21 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கடையில் இருந்த புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் (வயது 32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story