மளிகை கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது
வேப்பனப்பள்ளியில் மளிகை கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள மளிகை கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் வேப்பனப்பள்ளியில் உள்ள மளிகை கடைகளில் திடீரென சோதனை செய்தனர். அப்போது வேப்பனப்பள்ளியில் குப்பம் ரோடு செல்லும் சாலையில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக சின்னபொம்மரசனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசகவுடு ஸ்ரீநாத் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தபோது குட்கா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அரியனபள்ளி கிராமத்தை சேர்ந்த முரளி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். 2 மளிகை கடைகளில் இருந்தும் 4 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.