வாலிபர் கொலையில் 2 பேர் கைது


வாலிபர் கொலையில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திகிரி அருகே வாலிபர் கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி:

மத்திகிரி அருகே வாலிபர் கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தகராறு

ஓசூர் மத்திகிரி கொத்தூரில் பழனிபாபா பிறந்த நாள் பொதுக்கூட்டம் கடந்த 14-ந் தேதி நடந்தது. அப்போது ஓசூர் ராம் நகர் சினு (வயது 19), ஓசூர் ராம் நகரை சேர்ந்த மன்சூர் அலிகான் (28) உள்பட பலர் கலந்து கொண்டனர். சினு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை வெளியே போகுமாறு கூட்டத்தில் இருந்தவர்கள் கூறினர். அப்போது ஏற்பட்ட தகராறில் சினு தாக்கப்பட்டார்.

இதனால் அவர் ஓசூர் நாமல்பேட்டையை சேர்ந்த ஹரிபிரகாஷ் என்பவரின் மகனான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பவன் பிரகாஷ் (19), ஓசூர் ராம் நகரை சேர்ந்த சர்தாஜ் (18) ஆகியோரை அழைத்துக் கொண்டு மீண்டும் அங்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்றார். அவர்கள் ஓசூர் சானசந்திரம் வ.உ.சி. நகரை சேர்ந்த மகபூப்பாஷா (30) என்பவரை தாக்கினர்.

வாலிபர் சாவு

அப்போது மகபூப் பாஷாவுடன் இருந்தவர்கள் சர்தாஜ், பவன் பிரகாஷ் உள்ளிட்டோரை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சர்தாஜ் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதேபோல பவன் பிரகாஷ், மகபூப் பாஷா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட சர்தாஜின் தந்தை பயாஸ் மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மகபூப் பாஷா, ஓசூர் ராம் நகரை சேர்ந்த முகமது சாகிப், முபாரக், முகமது இம்ரான், பாரதிதாசன் நகரை சேர்ந்த அகமது உள்ளிட்ட சிலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் ராம் நகரை சேர்ந்த மன்சூர் அலிகான் (28), முகமது இம்ரான் (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொலை முயற்சி வழக்கு

இந்த நிலையில் மகபூப் பாஷா தாக்கப்பட்டது தொடர்பாக அவரது தந்தை அமானுல்லா மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஜாசிம் அக்ரம், பவன் பிரகாஷ், சர்தாஜ், அமீத், சைபு, சபீக் ஆகிய 6 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதில் சர்தாஜ் கொலை செய்ப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story