கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்ற 3 பேர் கைது


கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்ற 3 பேர் கைது
x

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில், சுற்றுலா பயணிகளுக்கு சில‌ர் போதை காளான் ம‌ற்றும் க‌ஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலையரங்கம் பகுதிக்கு கொடைக்கானல் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 32), ராஜபாண்டி (26), பெங்களூருவை சேர்ந்த கிளிப்ட் அகஸ்டின் (27) என்றும், அவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா மற்றும் போதை காளானை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 1 கிலோ போதை காளான் பறிமுதல் செய்ய‌ப்ப‌ட்ட‌து.


Next Story