அம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது
காவேரிப்பட்டணம் அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
அம்மன் கோவில்
காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஅள்ளி புதூரில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த, 27-ந் தேதி இரவு, வாலிபர் ஒருவர் கேட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் நகைகளை திருடினார். பின்னர் அந்த நபர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றார். சத்தம் கேட்டு அருகில் பொதுமக்கள் கோவிலுக்குள் சென்றனர்.
வாலிபர் உண்டியலை உடைக்க முயன்றதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 22) என தெரிய வந்தது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வாலிபர் கைது
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் சதீஷ்குமாரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மீது ஏற்கனவே குருபரப்பள்ளி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, சேலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.