பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே உள்ள பாரூர் போலீசார் ஈஸ்வரன் கோவில் அருகில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வளத்திகானூரை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 38), அரசம்பட்டி சிவலிங்கம் (55), பாரூர் சீனிவாசன் (37), சின்ன கரடியூர் சின்னதுரை (49) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர். நாகரசம்பட்டி போலீசார் எருமம்பட்டி அருகில் ரோந்து சென்றபோது அங்கு சூதாடிய அந்த ஊரை சேர்ந்த கிருஷ்ணன் (59), சிவக்குமார் (35), நரசிம்மன் (38), குமார் (35) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மகராஜகடை போலீசார் மேல்பட்டு பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சூதாடிய பழையபேட்டையைச் சேர்ந்த மணி (29) என்பவரை கைது செய்தனர்.


Next Story