லாரி டிரைவருக்கு கத்திக்குத்து


லாரி டிரைவருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் அருகே பெண் கேட்டு கொடுக்க மறுத்த லாரி டிரைவரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கெலமங்கலம் துளசி நகரை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 44), லாரி டிரைவர். அதேபகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (24), கூலித்தொழிலாளி. இவர் முருகேசின் 20 வயது மகளை ஒருதலையாக காதலித்து வந்தார். இதனால் திருமூர்த்தி முருகேஷ் வீட்டிற்கு சென்று அவரது மகளை பெண் கேட்டுள்ளார். அதற்கு இவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓசூரை சேர்ந்த வாலிபருக்கும், முருகேசின் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனால் ஆத்திரமடைந்த திருமூர்த்தி, முருகேஷ் வீட்டின் மீது கல்லை துாக்கி எறிந்தார். அதை தட்டி கேட்ட அவரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த முருகேசை குடும்பத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்ட்டர் கார்த்திக்கேயன் வழக்குப்பதிவு செய்து திருமூர்த்தியை கைது செய்தார்.


Next Story