கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பட்டிவீரன்பட்டி அருகே கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திண்டுக்கல்
பட்டிவீரன்பட்டியை அடுத்த அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 31). இவர், கடந்த அக்டோபர் மாதம் 8-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (23), மைதிலி நாதன் (19), பிரேம்குமார் (24) உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் விக்னேஷ் உள்பட 3 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி கலெக்டர் விசாகனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் விக்னேஷ் உள்பட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் 3 பேர் களையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story