நகைக்கடையில் திருடிய பெண் கைது
ஊத்தங்கரையில் நகைக்கடையில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை
திருப்பத்தூரை சேர்ந்தவர் மன்சூர் அகமது (வயது 36). இவர் ஊத்தங்கரையில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 15-ந் தேதி இவரது கடைக்கு ஒரு பெண் நகை வாங்குவதாக வந்தார். அவர் 4 கிராம் தங்க நாணயம் ஒன்றை திருடி பையில் போட்டார். இதை கவனித்த கடை ஊழியர்கள் அந்த பெண்ணை பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் குமாரமங்கலம் அருகே உள்ள வீராங்குப்பத்தைச் சேர்ந்த கவிதா (37) என்பதும், நாணயத்தை திருட முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story