கஞ்சா, குட்கா விற்ற 11 பேர் கைது


கஞ்சா, குட்கா விற்ற 11 பேர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்றதாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்றதாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் ஊத்தங்கரை பாரதிபுரத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 19), சூளகிரி அருகே உள்ள பெரியகோடிபள்ளத்தைச் சேர்ந்த 18 வயது நபர், கிருஷ்ணகிரியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் ஆகியோா் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.இதேபோல் கஞ்சா விற்றதாக மிட்டஅள்ளி சக்திவேல் (21), நந்திமங்கலம் ராஜசேகர் (22), ஓசூர் சின்ன எலத்தகிரி சத்யபாணி கந்தபத்ரா (32), பத்தலப்பள்ளி மனோஜ் (22), அருள்பிரசாத் (25), பர்கூர் கோடியூர் நாகராஜ் (62) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான 9 பேரிடம் இருந்து 850 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா விற்ற 2 பேர் கைது

ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் சிப்காட் போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள கடைகளில் சோதனை செய்தபோது ஜூஜூவாடி குமார் (22), பிரதாப் (28) ஆகிய 2 பேரும் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story