அய்யலூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
அய்யலூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்
அய்யலூர் அருகே உள்ள தங்கம்மாபட்டி பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து சென்றனர். அப்போது தங்கம்மாபட்டி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் திருச்சி மாவட்டம் தொப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜகோபால் (வயது 46), மீனாட்சியூரை சேர்ந்த அழகர்சாமி (54), விடத்தலாம்பட்டியை சேர்ந்த கர்ணன் என்ற கருப்பையா (54) என்பதும், லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,400 மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story