கத்திமுனையில் பணம்-மோட்டார் சைக்கிளை பறித்த 2 பேர் கைது


கத்திமுனையில் பணம்-மோட்டார் சைக்கிளை பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே தனியார் நிறுவன ஊழியரை வழிமறித்து கத்திமுனையில் பணம்-மோட்டார் சைக்கிளை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

ராயக்கோட்டை அருகே உள்ள எடவனஅள்ளியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவர் மோட்டார்சைக்கிளில் ராயக்கோட்டை - ஓசூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் ஆனந்தனை வழிமறித்து கத்திமுனையில் ரூ.500-ஐயும், மோட்டார்சைக்கிளையும் பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து ஆனந்தன் ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர்கள் ராயக்கோட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த நாகராஜ் (30), பாஞ்சாலி நகரை சேர்ந்த சந்தோஷ் (21) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story