போடியில் டீக்கடையில் திருட முயன்ற 2 பேர் கைது
போடியில் டீக்கடையில் திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி
போடியில், சாலை காளியம்மன் கோவில் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருபவர் தமிழரசி (வயது 55). இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு 2 பேர் வந்தனர். அப்போது அவர்கள் திடீரென்று தமிழரசியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், கடையில் கல்லாபெட்டியில் வைத்திருந்த பணத்தை திருட முயன்றனர். இதனால் தமிழரசி கூக்குரல் எழுப்பினார். அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போடி போலீஸ் நிலையத்தில் தமிழரசி புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழரசியின் கடையில் திருட முயன்ற நபர்கள் போடி போஸ்பஜார் தெருவை சேர்ந்த லோகேஷ் குமார் (23), ஹைகெந்திரா (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story