10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது


10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது
x

செம்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வழக்கில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே நடுப்பட்டி இந்திராபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 10-ம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்றதாக அந்த மாணவியின் பெற்றோர் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கடந்த சில நாட்களுக்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செம்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் மாணவியையும், சக்திவேலையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் போலீசார் தேடுவதை அறிந்த சக்திவேல், அந்த மாணவியுடன் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தஞ்சம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த செம்பட்டி போலீசார், மாணவியை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் மாணவியை கடத்தியதாக சக்திவேல் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


Next Story