கன்னிவாடி அருகே சூதாடிய 8 பேர் கைது


கன்னிவாடி அருகே சூதாடிய 8 பேர் கைது
x

கன்னிவாடி அருகே சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று கன்னிவாடி அருகே தெத்துப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள டீக்கடை பின்புறம் மரத்தடியில் 8 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

இதையடுத்து சூதாடிய நபர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், தெத்துப்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 55), முருகன் (45), சுந்தரசேகர் (40), செல்வம் (50), ராஜசேகர் (42), திலகர் (32), ஞானமணி (54), நாச்சிமுத்து (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரத்து 170 மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள், சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story