கஞ்சா கடத்திய 2 பேர் கைது


கஞ்சா கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அருகே தாசரப்பள்ளியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் கே.பூசாரிப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்கிற ராக்கி (வயது25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா பறிமுதல்

இதேபோல கிருஷ்ணகிரி குப்பம் சாலை பழையபேட்டை போலீஸ் சோதனைச்சாவடி அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து மோட்டார்சைக்கிளில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகா ராம்பத்தூரை சேர்ந்த குபேந்திரன் (58) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

தப்பி ஓட்டம்

அதேபோல ஓசூர் ஓம்சாந்தி நகர் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் வண்டியை கீழே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் மோட்டார்சைக்கிளில் சோதனை செய்த போது கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து மோட்டார்சைக்கிளையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story