திண்டுக்கல் கோர்ட்டு முன்பு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது


திண்டுக்கல் கோர்ட்டு முன்பு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது
x

திண்டுக்கல் கோர்ட்டு முன்பு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

தாடிக்கொம்புவை சேர்ந்தவர் செல்வபாண்டி (வயது 30). நேற்று முன்தினம் இவர், திண்டுக்கல் கோர்ட்டில் வக்கீல் ஒருவரை சந்திக்க சென்றார். பின்னர் அவர் கோர்ட்டு முன்பு உள்ள உணவகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், திடீரென்று கத்தியை காட்டி செல்வபாண்டியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே சட்டப்பையில் இருந்த பணத்தை பறிக்க முயன்றார்.

இதனால் சுதாரித்துக்கொண்ட செல்வபாண்டி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் தாடிக்கொம்புவை சேர்ந்த வீரபாகு (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபாகுவை கைது செய்தனர்.


Related Tags :
Next Story