புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
சூளகிரி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
சூளகிரி
சூளகிரி அருகே இம்மிடிநாயக்கனபள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவர் பைசல் (வயது23). இவர், கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அதில் ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் பைசலை கைது செய்தனர். கடையில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், சூளகிரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றதாக, முருகேசன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story