பெரியகுளம் அருகே மது விற்ற வாலிபர் கைது


பெரியகுளம் அருகே மது விற்ற வாலிபர் கைது
x

பெரியகுளம் அருகே மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேனி

பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி பகுதியில் வாலிபர் ஒருவர் மதுவிற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் அதே ஊரை சேர்ந்த அறிவுக்கரசன் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவுக்கரசனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 72 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story