கேரளாவுக்கு 17 டன் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் கைது


கேரளாவுக்கு 17 டன் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2023 1:00 AM IST (Updated: 7 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

குமுளியில் கேரளாவுக்கு கடத்த கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

தமிழக-கேரள எல்லையான குமுளியில் உள்ள தமிழக போலீஸ் சோதனை சாவடியில் உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து குமுளி நோக்கி வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில், அந்த லாரியில் 50 கிலோ வீதம் 340 மூட்டைகளில் மொத்தம் 17 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச்செல்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜான் பாட்ஷா (வயது 33), உடன் வந்த மதுரை தெற்குவெளி வீதியை சேர்ந்த சீனிவாசன் (54) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய பாலசிங் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story