கஞ்சா கடத்திய 2 பேர் கைது


கஞ்சா கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் மது விலக்கு அமல் பிரிவு போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து வந்தனர். போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்கள் 8 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அபிமனு கானார் (வயது30), கிரிசு சந்திரகானார் (37) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story