கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
உத்தனப்பள்ளி, அஞ்செட்டி பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயக்கோட்டை
உத்தனப்பள்ளி, அஞ்செட்டி பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் ரோந்து
உத்தனப்பள்ளி போலீசார் சானமாவு முனியப்பன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் நீலகிரி பவன் (வயது 23), சானமாவு ஆனந்த் (49) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 600 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது
அஞ்செட்டி போலீசார் டவுன் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கோரிபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீராமன் (55) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.