இளம்பெண்ணிடம் தகராறு; தொழிலாளி கைது


இளம்பெண்ணிடம் தகராறு; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே பொம்மைகள் காணாமல் போனதை கேட்ட இளம்பெண்ணிடம் தகராறு செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் தாலுகா சத்தலப்பள்ளியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பொம்மை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சில பொம்மைகள் காணாமல் போனது. இது குறித்து அந்த இளம்பெண், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி வெங்கடேசன் (34) என்பவரிடம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் அந்த பெண்ணிடம் தகராறு செய்து ஆபாசமாக பேசினார். இதுகுறித்து அந்த இளம்பெண் கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.


Next Story