பொது இடத்தில் தகராறு; 2 பேர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே பொது இடத்தில் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரச்சந்திரம் பஸ் நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக நின்று 2 பேர் தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்து கொண்டு இருந்தனர். இதுதொடர்பாக அதேபகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (வயது35), டி.கொத்தனூர் முனிராஜ் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் மீது தேன்கனிக்கோட்டை போலீசில் ஏற்கனவே கொலை குற்றம் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story