புகையிலை பொருட்கள் விற்ற 3 கைது


புகையிலை பொருட்கள் விற்ற  3 கைது
x

வாழப்பாடியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 கைது செய்யப்பட்டனர்.

சேலம்

வாழப்பாடி

வாழப்பாடி பருத்தி மண்டி பகுதியில் வசித்து வருபவர் ஹனிபா (வயது 48). இவர் இதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். ஹனிபா தனது மளிகை கடையில் சட்டவிரோதமாக பான், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் இந்த கடையில் திடீரென நடத்திய சோதனையில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பான், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், மளிகை கடைக்காரர் ஹனிபாவையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், தொளசம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சந்திரசேகர் (62) என்பது பெட்டி கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகளையும், அமரகுந்தி பகுதியை பாரூக் (52) என்பவரின் மளிகை கடையில் வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகளையும் போலிசார் பறிமுதல் செய்ததுடன், அவர்கள் இருவரையும் தொளசம்பட்டி போலீசார் கைது செய்தனர்.


Next Story