திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 March 2023 2:15 AM IST (Updated: 29 March 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அகில்குமார். தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், திண்டுக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். திண்டுக்கல்-பழனி சாலையில் காளிமுத்துபிள்ளை தெரு பகுதியில் ஒரு கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பொருட்களை வாங்க சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதுகுறித்து மேற்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த மகேந்திரன் (வயது 31) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்ததோடு, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story