கஞ்சா சாக்லெட்டுகள் விற்ற 4 பேர் கைது


கஞ்சா சாக்லெட்டுகள் விற்ற 4 பேர் கைது
x

ஓசூரில் கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா சாக்லெட்டுகள்

ஓசூர் டவுன் போலீசார் பழைய பெங்களூரு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 ஆட்டோக்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தினர். அந்த 2 ஆட்டோக்களிலும் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 ஆட்டோக்களிலும் சோதனை செய்தனர். அதில் ஆட்டோவில் 600 கிராம் அளவுக்கு போதை தரும் கஞ்சா சாக்லெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆட்டோக்களில் வந்த 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

அவர்கள் ஓசூர் ராம் நகரை சேர்ந்த கந்தன் (வயது32), கர்னூர் கணேஷ் மேதா (38), ஓசூர் காந்தி ரோடு ஜமீர் (34), ஓசூர் வாசவி நகர் சபரீசன் (36) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் கஞ்சா சாக்லெட்டுகளை ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்ய எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா, 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story