பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் சிப்காட் போலீசார் சின்ன எலசகிரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பசுபூமாச்சி (வயது23), அருண் (23), நூர்ஜல் இஸ்லாம் (21) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று பாகலூர் போலீசார் கர்னப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அண்ணா நகர் அபிலாஷ் (27), பசுவராஜ் (26), சூளகுண்டா நாகராஜ் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 7 ஆயிரம், 8 மோட்டார்சைக்கிள்கள், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கந்திகுப்பம் போலீசார் கொல்ரூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய மோடிகுப்பம் சுரேஷ் (41), கொல்ரூர் மோகன் (42) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story