சேவல் சண்டை நடத்திய 14 பேர் கைது


சேவல் சண்டை நடத்திய 14 பேர் கைது
x

மேட்டூர் அருகே சேவல் சண்டை நடத்திய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

மேட்டூர்

மேட்டூரை அடுத்த கோல்நாயக்கன்பட்டி பகுதியில் சேவல் சண்டை நடைபெறுவதாக மேட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் கோல்நாயக்கன்பட்டி, புதுக்காடு ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினர் சேவல் சண்டையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த ரஞ்சித் (வயது 25), மகேந்திரன் (29), மேட்டூர் கருமலைகூடலை சேர்ந்த சரவணகுமார் (31), ராஜேஷ் (24), கார்த்தி (28) உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள், சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story