வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறித்த ரவுடி கைது


வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறித்த ரவுடி கைது
x

சேலத்தில் வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

சேலம்

சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே நேற்று 21 வயதுடைய வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சின்னதிருப்பதியை சேர்ந்த ரவுடி சித்தேஸ்வரன் வந்தார். பின்னர் அவர் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,750 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து சித்தேஸ்வரனை கைது செய்தார்.


Next Story