மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த 2 பேர் கைது
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே பாலிஷ் போட்டு தருவதாக மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
அயோத்தியாப்பட்டணம்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னாம்பள்ளி கக்கன் காலனியைச் சேர்ந்த செல்லப்பன் மனைவி பெருமாயி (வயது70). கடந்த 31-ந்தேதி காலை இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மூதாட்டியிடம் வெள்ளி, தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி 5 பவுன் நகையை அபேஸ் செய்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வின்குமார் (30). கிஷான்லால் (34) ஆகியோர் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story