போலி டாக்டர் கைது
ஓமலூர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்
ஓமலூர் அருகே உள்ள தின்னப்பட்டி பகுதியில் ஒருவர், எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் நித்யானந்தத்திற்கு புகார் வந்தது. இதுகுறித்து அவர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அபபோது ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆண்ட்ரஸ் (வயது 40) என்பவர் அங்குள்ள மருந்து கடை அருகில் ஒரு அறையில் ஓமியோபதி பட்டப்படிப்பு படித்து விட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்ததும், போலி டாக்டர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்ட்ரஸை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஊசி மற்றும் மருந்துகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.