போலி டாக்டர்கள் 2 பேர் கைது


போலி டாக்டர்கள் 2 பேர் கைது
x

சங்ககிரி பகுதியில் நேற்று ஒரே நாளில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சங்ககிரி

சங்ககிரி பகுதியில் நேற்று ஒரே நாளில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

பி.ஏ. படித்து விட்டு...

சேலம் மாவட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 63). இவர் சங்ககிரி தெலுங்கர் தெருவில் உள்ள மருத்துவ பரிசோதனை நிலையத்தில் தனது அண்ணன் பெயரில் ஆஸ்பத்திரி என பெயர் வைத்துக்கொண்டு, அங்கு நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக சங்ககிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர் ஆர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோர் நேற்று அந்த போலி கிளினிக்கிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் பன்னீர்செல்வம் பி.ஏ. பட்டப்படிப்பு படித்து இருப்பது தெரியவந்தது.

டாக்டரான அவருடைய அண்ணன் இறந்து விட்டார். முன்னதாக அவரிடம் உதவியாளராக இருந்த அனுபவத்தில் பன்னீர்செல்வம் அலோபதி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. அதிகாரிகள் அங்கிருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நோயாளிகளுக்கு போலி மருத்துவம் பார்த்த போலி டாக்டர் பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

மற்றொருவர் கைது

இதைத்தொடர்ந்து சங்ககிரி வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு ரோட்டில் தேவராஜன் (67) என்பவர் வீட்டில் வைத்து ேநாயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், சங்ககிரி அரசு டாக்டர் செந்தில்வேலுடன் சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது எஸ்.எஸ்.எல்.சி. படித்து விட்டு டாக்டர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த அனுபவத்தில் தேவராஜன் போலி டாக்டராக மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை கைப்பற்றிய போலீசார் தேவராஜனையும் கைது செய்தனர்.


Next Story