8-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்; போக்சோவில் தொழிலாளி கைது


8-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்; போக்சோவில் தொழிலாளி கைது
x

ஏற்காட்டில் 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சேலம்

ஏற்காடு

ஏற்காட்டில் உள்ள ஒரு மலை கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 28), மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நண்பர் சித்தையன் என்பவரது உதவியுடன் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெரியவந்ததும் அந்த சிறுமியின் தந்தை சக்தியின் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் சிறுமியின் தந்தையை சக்தி தாக்கினார். அதனால் படுகாயம் அடைந்த அவர் ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து அவரது தாயார் கொண்டலாம்பட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சக்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story