திண்டுக்கல்லில் சோலார் பேனல்களை திருடிய 4 பேர் கைது


திண்டுக்கல்லில் சோலார் பேனல்களை திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2023 2:30 AM IST (Updated: 1 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் சோலார் பேனல்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில், வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் கருப்பணசாமி கோவில் பின்புறம் சூரியஒளியை பயன்படுத்தி சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு மின்சாரம் உற்பத்திக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அங்கிருந்த 21 சோலார் பேனல்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் வசீகரன், திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுமலையை சேர்ந்த குணசேகரன் (வயது 32), ராஜா (39), சிவக்குமார் (39), நிலக்கோட்டை அவையம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (24) ஆகிய 4 பேர் சேர்ந்து சோலார் பேனல்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சோலார் பேனல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story