கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 May 2023 2:30 AM IST (Updated: 6 May 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேனி

தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார், பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.

அதில், 1 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த பாண்டி மகன் பூனை என்ற புவனேஸ்வரன் (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தனர்.


Next Story