ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது


ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது
x

சேலத்தில் ரவுடி கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சேலத்தில் ரவுடி கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி கொலை

சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 28). பிரபல ரவுடி. இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று வெளியே வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த ரஞ்சித்குமாரை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற அம்மாபேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக தாதகாப்பட்டியை சேர்ந்த மகேந்திரன், சங்ககிரியை சேர்ந்த புகழேந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.

மேலும் ஒருவர் கைது

இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய கோரி ரஞ்சித்குமாரின் உடலை வாங்க மறுத்து நேற்று முன்தினம் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தநிலையில் ரஞ்சித்குமாரின் உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியாணி மணி (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story