கஞ்சா விற்ற 4 பேர் கைது
கொண்டலாம்பட்டி, நங்கவள்ளியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொண்டலாம்பட்டி
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனியாண்டி (வயது 26), அதே ஊரைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (29) ஆகிய 2 பேரும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள 5¼ கிலோ கஞ்சா, ரூ.86 ஆயிரத்து 300 மற்றும் எலக்ட்ரானிக் கருவி, 5 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று நங்கவள்ளி ேபாலீசார் டவர் நால்ரோடு பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு மல்லிகுந்தத்தை சேர்ந்த வெங்கடேஷ் (20), பொதியம்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (26) ஆகிய 2 பேரும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.