போடியில் மதுபானம் விற்ற 3 பேர் கைது
போடியில் மதுபானம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடி டவுன் போலீசார் நேற்று காலை நகர்ப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்த சாக்குப்பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதனுள் 60 மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் போடி பங்காரு மேற்கு தெருவை சேர்ந்த காமாட்சி (வயது 49) என்பதும், விற்பனைக்காக மதுபாட்டில்களை கடத்திச்சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காமாட்சியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் போடியில் மதுபானம் விற்ற போடி பங்காரு மேற்கு தெருவை சேர்ந்த ஜெயராணி (52), குப்பிநாயக்கன்பட்டி வஞ்சிஓடை தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி (62) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.