தி.மு.க. கவுன்சிலரின் கணவரை தாக்கிய 2 பேர் கைது
இளம்பிள்ளை அருகே தி.மு.க. கவுன்சிலரின் கணவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
இளம்பிள்ளை
இளம்பிள்ளை அருகே உள்ள நல்லணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது உறவினரான பனங்காட்டை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் சேர்ந்து ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வியாபாரம் சம்பந்தமாக அவர்கள் இருவருக்கும் இடையே நல்லணம்பட்டியில் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அங்கு இருந்த இடங்கணசாலை நகராட்சி தி.மு.க. கவுன்சிலர் இந்திராணியின் கணவர் வஜ்ரவேல், சம்பவம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை பனங்காடு பகுதியை சேர்ந்த நாகராஜ் தரப்பை சேர்ந்த தமிழ்செல்வன், மணிகண்டன், அஜித் உள்பட 7 பேர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த வஜ்ரவேல், மூர்த்தி, வெங்கடேசன் ஆகியோர் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் வழக்கு தொடர்பாக மணிகண்டன் (23), நாகராஜ் (49) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.