தேனியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது


தேனியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 May 2023 2:30 AM IST (Updated: 29 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேனி

தேனி மேற்கு சந்தை பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது.

விசாரணையில் அவர் தேனி பெரியமாயன் தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் தர்மர் (வயது 33) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story