கருப்பூர் அருகேபெண் தற்கொலையில் கணவர் கைது


கருப்பூர் அருகேபெண் தற்கொலையில் கணவர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2023 1:16 AM IST (Updated: 19 Jun 2023 12:59 PM IST)
t-max-icont-min-icon
சேலம்

கருப்பூர்

கருப்பூர் அருகே மாங்கொட்டை பழையூர் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரோகிணி (வயது 32). எம்.காம். பட்டதாரி. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் ரோகிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரோகிணி கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியதாக தெரிகிறது. பிரகாசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் பிரகாசை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடந்து வருகிறது.


Next Story