ஊத்தங்கரை அருகே 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் அண்ணன்கள் உள்பட 4 பேர் போக்சோவில் கைது
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த அண்ணன்கள் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கூட்டு பலாத்காரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு தாய் இல்லை. தந்தை மட்டும் உள்ளார். இவர் மதுவுக்கு அடிமையானவர். இந்த சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் அந்த சிறுமியின் தந்தை மற்றும் சிறுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த சிறுமியின் உடன் பிறந்த 19 வயது அண்ணன், பெரியப்பா மகனான 19 வயதாகும் மற்றொரு அண்ணன், 42 வயது தாய்மாமன், படதாசம்பட்டி பகுதியை சேர்ந்த நடன இயக்குனர் தமிழ்வண்ணன் (29) ஆகிய 4 பேரும், சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
4 பேர் போக்சோவில் கைது
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த அண்ணன்கள் உள்பட 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார், அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கிய நிலையில், மதுவுக்கு அடிமையான அந்த சிறுமியின் தந்தை தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.