கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 20 பேர் கைது சூதாடியதாக 19 பேர் சிக்கினர்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 20 பேர் கைது சூதாடியதாக 19 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 1 July 2023 1:15 AM IST (Updated: 1 July 2023 8:32 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா லாட்டரி விற்றதாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பணம் வைத்து சூதாடியதாக 19 பேர் சிக்கினர்.

கஞ்சா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

அப்போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அருகே கதவணை பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 21), கிருஷ்ணகிரி புதுப்பேட்டையை சேர்ந்த 18 வயது வாலிபர், அட்டகுறுக்கி முருகேசன் (59), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரவாடியை சேர்ந்த நரசிம்மன் (43) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

லாட்டரி சீட்டு

இதேபோல பர்கூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி டவுன், காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்ததாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுக்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா விற்பனை

கல்லாவி, சாமல்பட்டி, மத்தூர், போச்சம்பள்ளி, ஓசூர் டவுன், சிப்காட், மத்திகிரி பகுதிகளில் கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது குட்கா விற்றதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டம்

அதேபோல ஊத்தங்கரை, பாகலூர், சூளகிரி, ராயக்கோட்டை, அஞ்செட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், 18 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story