பாலியல் வழக்குகளில் கைதான ஜீப் டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பாலியல் வழக்குகளில் கைதான ஜீப் டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

பாலியல் வழக்குகளில் கைதான ஜீப் டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தேனி

போடி தாலுகா அகமலை கிராமத்தை சேர்ந்த பால்பாண்டியன் மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 21). ஜீப் டிரைவர். இவர் கடந்த மார்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தென்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், மற்றொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தேனி அனைத்து மகளிர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து நவநீத கிருஷ்ணனை கைது செய்தனர். கைதான அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவநீத கிருஷ்ணன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார்.


Next Story